/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீமஹா மாரியம்மன் கும்பாபிஷேகம் விழாக்கோலம் பூண்டது மயில்ரங்கம்
/
ஸ்ரீமஹா மாரியம்மன் கும்பாபிஷேகம் விழாக்கோலம் பூண்டது மயில்ரங்கம்
ஸ்ரீமஹா மாரியம்மன் கும்பாபிஷேகம் விழாக்கோலம் பூண்டது மயில்ரங்கம்
ஸ்ரீமஹா மாரியம்மன் கும்பாபிஷேகம் விழாக்கோலம் பூண்டது மயில்ரங்கம்
ADDED : ஜூன் 04, 2025 01:27 AM
வெள்ளகோவில்; வெள்ளகோவில், மயில்ரங்கத்தில் உள்ள மஹா மாரியம்மன் கோவிலில், 46 ஆண்டுக்குப் பின், 6ம் தேதி மஹா கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.
மயில்ரங்கம் கிராமத்தில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த மஹா மாரியம்மன் கோவில் உள்ளது. கணபதி, முருகன் மற்றும் பேச்சியம்மன் ஆகிய கோவில்களுக்கு கடந்த, 1979ம் ஆண்டு கும்பாபிேஷகம் நடந்தது. இந்நிலையில், கோவில் திருப்பணிகள் செய்து, 46ஆண்டுகளுக்கு பின், தற்போது இக்கோவிலின் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது.
இன்று, விக்னேஷ்வர பூஜை. கணபதி ேஹாமம், முளைப்பாலிகை மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம், யாக சாலை வந்து சேரும் நிகழ்வும், கிராம சாந்தியும் நடைபெறவுள்ளது. 5ம் தேதி, இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகவேள்வி பூஜை, சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவையும், 6ம் தேதி, நான்காம் கால யாக பூஜைகளைத் தொடர்ந்து கோவில் மஹா கும்பாபிேஷகமும் நடைபெறவுள்ளது.
கும்பாபிேஷக விழா முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாக சாலை அமைத்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களுடன் பூஜைகளை துவக்கியுள்ளனர்.
வரும், 6ம் தேதி மஹா கும்பாபிேஷகமும், அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெறும் என, சேனாபதிபாளையம் கிராமம், வெள்ளகோவில் மற்றும் மயில்ரங்கம் ஊர்மக்களும், திருப்பணி குழுவினர் தெரிவித்துள்ளனர்.