ADDED : ஜூன் 27, 2025 11:37 PM
திட்டம் தொடர்வது ஏன்?
பத்தாவது ஆண்டுடன் திட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என்று உத்தேசித்திருந்தோம். ஆனால், காங்கயம் - துளிகள், வெள்ளகோவில் - நிழல்கள், உடுமலையில், 'மழை உடுமலை' என்று, பல்வேறு இளம் பசுமை அமைப்புகள் எங்களுடன் பயணிக்கின்றன. இத்திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, பல்வேறு முயற்சியை துவக்கியுள்ளனர்.
அத்தகைய இளம் பசுமை அமைப்புகளை மென்மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை தொடர முடிவு செய்தோம்.
ஜப்பான் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அகழ்வு இயந்திரம் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது; அதன்வாயிலாக, திருப்பூரிலும் குளம், குட்டை துார்வாரும் அறப்பணியை துவக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
- சிவராம், தலைவர், வெற்றி அறக்கட்டளை.