/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர், வஞ்சிபாளையம் கூட்ஸ்ெஷட் நவீனமாகிறது
/
திருப்பூர், வஞ்சிபாளையம் கூட்ஸ்ெஷட் நவீனமாகிறது
ADDED : ஜூன் 02, 2025 11:23 PM
திருப்பூர் : பெருந்துறை, வஞ்சிபாளையம், திருப்பூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட்களை மேம்படுத்தும் பணிக்கு, தெற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது.
சரக்கு ரயில்கள் மூலம் பொருட்களை அனுப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், சரக்குகள் கையாளப்படும் ஸ்டேஷன்களில் உள்ள கூட்ஸ்ெஷட்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய திட்டத்துக்கு தெற்கு ரயில்வே வரையறுத்துள்ள பட்டியலில், திருப்பூர் ரயில்வே ஆளுகைக்கு உட்பட்ட பெருந்துறை, திருப்பூர், வஞ்சிபாளையம் ஆகிய மூன்று ஸ்டேஷன் கூட்ஸ்ெஷட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
திருப்பூர் ரயில்வே வணிகப்பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:
இத்திட்டத்தின் கீழ் கூட்ஸ்ஷெட்களை மேம்படுத்துவது, தேவையான பகுதியில் மேற்கூரைகளை கூடுதலாக அமைப்பது; வந்து செல்லும் சரக்கு வாகனங்கள் பார்க்கிங் இடவசதி விரிவாக்கம் செய்வது; சரக்கு கையாளுவதற்கான நவீன கருவி, தேவையிருப்பின் தற்போதுள்ள பிளாட்பார்ம்களுடன் கூடுதல் பிளாட்பார்ம்கள் நீட்டிப்பது; சுமைதுாக்கும் தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு, நிறுவனத்தை தேர்வு செய்யும் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது. ஜூலை இறுதிக்குள் கூட்ஸ்ெஷட் மாற்றமும், புதுமையும் பெறும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.