/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
/
பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்
ADDED : பிப் 29, 2024 08:44 PM

திருப்பூர்:டில்லியில், பிப்., 26ல் துவங்கிய 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி, நேற்றுடன் நிறைவடைந்தது. இதைப் பார்வையிட்ட, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தொழில் வளர்ச்சி பெற, நடைமுறைகள் எளிதாக்கப்படுமென அறிவித்தனர்.
கண்காட்சியில் திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினரின் நீடித்த நிலையான பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி, மறுசுழற்சி, ஆடைகள் மற்றும் வீட்டு ஜவுளிப்பொருட்கள் உற்பத்தி விபரம், காட்சிப்படுத்தப்பட்டன.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்திக்கான வழிகாட்டி கையேட்டை, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்டார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
வழிகாட்டி கையேடு மற்றும் சாதனை புத்தகம், வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு வினியோகிக்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தொழில்துறையினர், தங்களுக்குள் கலந்தாய்வு நடத்தி, பொது கோரிக்கையுடன் அரசை அணுக வேண்டும். அப்போது தான், சந்திக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை உருவாக்க முடியும் என மத்திய அரசு எண்ணுகிறது.
'பாரத் டெக்ஸ்' கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், 'வரும் ஆண்டுகளில், வளர்ச்சிப்பாதையில் தொழிலை கொண்டு செல்ல ஏதுவாக, அரசு நடைமுறைகளும் எளிதாக்கப்படும்' என, உறுதியளித்துள்ளனர். இது வரவேற்புக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.

