/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் பொங்கல் திருவிழா அமைப்பினர் ஆலோசனை
/
திருப்பூர் பொங்கல் திருவிழா அமைப்பினர் ஆலோசனை
ADDED : ஜன 09, 2024 11:53 PM
திருப்பூர்:திருப்பூரில் நடக்கவுள்ள பொங்கல் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி சார்பில், பொங்கல் திருவிழா மூன்று நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இதில், நொய்யல் கரையோரம் 15 மற்றும் 16 தேதிகளில் நொய்யல் பண்பாட்டு கழகத்துடன் இணைந்து இரு நாள் நிகழ்ச்சியும், 17ம் தேதி, ஜீவநதி நொய்யல் சங்கம், 'நிட்மா' சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து 1,008 பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி அலுவலர்கள், விழாவை இணைந்து நடத்தும் அமைப்பு நிர்வாகிகள், மாநகர போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவுக்கான முன்னேற்பாடுகள் தற்போதைய நிலை குறித்து விவரிக்கப்பட்டது.
அதன்பின், விழா நிகழ்ச்சிகள் விவரம், அதற்கான ஏற்பாடுகள், அமைப்பு வாரியாக எடுத்துக் கொண்டுள்ள பொறுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. விழா நிகழ்வுகளை நடத்தும் முறை, பாதுகாப்பு ஏற்பாடு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், வாகனங்கள் நிறுத்தும் வசதி ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது.

