/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு இடமாற்றம்
/
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு இடமாற்றம்
ADDED : ஜன 16, 2024 11:42 PM
திருப்பூர்;அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஒருங்கிணைந்த வளாகத்தில், இரண்டாவது தளத்தில் குழந்தைகள் வார்டு செயல்பட்டு வந்தது. தரைத்தளத்தில் பதிவு சீட்டு பெறும் பெற்றோர், குழந்தைகளை அழைத்துக் கொண்டு டாக்டரைபார்க்க சென்று திரும்பினர்.
இந்நிலையில், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு (அறை எண்: 600), குழந்தைகள் புறநோயாளிகள் பிரிவு (அறை எண்: 603), தீவிர சிகிச்சை பிரிவு (அறை எண்: 610), குழந்தைகள் தங்கி சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் வார்டு (அறை எண்: 611) ஆகியவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவு வாயிலில் இருந்து, இடதுபுறம், அம்மா உணவகம் எதிரில் உள்ள கட்டடத்தில், குழந்தைகள் மருத்துவத்துறை மற்றும் வார்டுகள் மாற்றப்பட்டுள்ளது.
'குளிர் காரணமாக காய்ச்சல், சளி, இருமல் உள் ளிட்ட பாதிப்புள்ளவர்கள் அதிகளவில் டாக்டர்களை சந்திக்க வருகின்றனர். அனைத்து நோயாளிகளும் ஒரே வரிசையில் காத்திருக்கும் போது, குழந்தைகளை அழைத்து வருவோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனை தவிர்க்க, 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பிரத்யேக புறநோயாளிகள் பிரிவு, பதிவு சீட் வழங்குமிடம் உருவாக்கப்பட்டு, தனி டாக்டர் குழு அமைக்கப்பட்டுள்ளது,' என, மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்தனர்.

