/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மார்க்கெட்டில் கடைகளை மாற்றி கட்டுங்க!
/
மார்க்கெட்டில் கடைகளை மாற்றி கட்டுங்க!
ADDED : ஜன 16, 2024 11:46 PM
திருப்பூர்;மாநகராட்சி கட்டியுள்ள புதிய மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகள் உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்றால், கடைகளின் அமைப்புகளை மாற்றியமைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, திருப்பூர் மாநகர மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கமுத்து, செயலாளர் மனோகர், பொருளாளர் கந்தசாமி ஆகியோர்கூறியதாவது:
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் தினசரி மார்க்கெட் வளாகம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் கட்டியுள்ள கடைகள் பயன்பாட்டுக்கு உரிய வகையில் இல்லை.
பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே மார்க்கெட்டின் இரு நுழைவாயில்களுக்கு இடையே மேற்கு நோக்கியுள்ள கடைகளின் அளவை குறைத்து கிழக்கு நோக்கி அமைக்க வேண்டும். நுாலகம் அருகேயுள்ள கடைகளை மேற்புறத்தில் உள்ள கடைகளை ரோட்டை நோக்கி அமையும் வகையில் மாற்ற வேண்டும். காற்று, வெளிச்சம் இல்லாத வகையில் உள்ள கடைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்.
இது போல் நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றை சுட்டிக் காட்டி, கடிதமும், விளக்கமான வரை படமும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை முறையாக மேற்கொண்டால் மட்டுமே மார்க்கெட் உரிய வகையில் இயங்க முடியும்.இது தவிர, காமராஜ் ரோட்டில் சாலையோர கடைகள் உள்ளன.
இவற்றால், மார்க்கெட் விற்பனை பாதிக்கிறது. இதனை அகற்ற வேண்டும். மார்க்கெட் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, வங்கி கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

