/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டூவீலர்கள் மோதல்: 3 பேர் பரிதாப பலி
/
டூவீலர்கள் மோதல்: 3 பேர் பரிதாப பலி
ADDED : அக் 21, 2025 12:00 AM

திருப்பூர்: காங்கயம் அருகே, டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில், சகோதரர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஈ ரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்தவர் கலைவாணி, 46; டெய்லர். கணவரை இழந்தவர். மகன்கள் மைத்ரேயன், 21, கரண், 12 ஆகியோருடன் வசித்து வந்தார். மூத்த மகன், எம்.காம்., முதலாம் ஆண்டு; இளைய மகன், எட்டாம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, மூவரும் சென்னிமலையில் இருந்து திட்டுப்பாறைக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டனர். மூத்த மகன் ஓட்டி சென்றார்.
பரஞ்சேர்வழி அருகே வந்தபோது, கிரஷர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துகிராம் தாஸ், 27, திலீப் தாஸ், 31, பிகாஸ் மாலிக், 18 ஆகியோர் வந்த பைக்குடன், ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதியது. அதே இடத்தில், மைத்ரேயன், கரண், துகிராம் தாஸ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த மற்ற மூன்று பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

