/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யூனியன் மில் ரோடு சந்திப்பு; விபத்து அபாயம் நீங்குமா?
/
யூனியன் மில் ரோடு சந்திப்பு; விபத்து அபாயம் நீங்குமா?
யூனியன் மில் ரோடு சந்திப்பு; விபத்து அபாயம் நீங்குமா?
யூனியன் மில் ரோடு சந்திப்பு; விபத்து அபாயம் நீங்குமா?
ADDED : அக் 14, 2025 11:44 PM

திருப்பூர்; திருப்பூர் யூனியன் மில் ரோடு சந்திப்பு பகுதியில் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த ரோட்டில் வாகனங்களை சீராக செல்ல தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, விபத்துக்களை குறைக்கவும் பல்வேறு போக்கு வரத்து தொடர்பான மாற்றங்களை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகே யூனியன் மில் ரோடு - வளம் ரோடு சந்திப்பு பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதற்கு முன், அந்த இடத்தில் சிறிய அளவில் ரவுண்டானா இருந்தது.
புதிய பாலம் கட்டுவதற்காக அகற்றப்பட்டது. அதன் பின், வாகனங்கள் சீராக செல்ல தடுப்பு போன்றவற்றை போலீசார் ஏற்படுத்தவில்லை. இதனால், சந்திப்பு பகுதியில் விபத்து அபாயத்துடன் வாகனங்கள் ரோட்டில் தாறுமாறாக செல்கின்றன.
யூனியன் மில் ரோட்டில் வாகனங்கள் முறையாக செல்ல குறிப்பிட்ட துாரத்துக்கு தடுப்பு ஏற்படுத்த வேண்டும். போலீசார் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

