/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தையை மேம்படுத்த வலியுறுத்தல்
/
உழவர் சந்தையை மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : அக் 20, 2025 10:15 PM
உடுமலை: உடுமலை உழவர் சந்தைக்கு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள் விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தினமும், 80 முதல், 110 விவசாயிகள் வரை, 30 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தினமும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் வருகின்றனர்.
உடுமலை உழவர் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரோடு, பராமரிப்பின்றி, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி வருகிறது.
மேலும், உழவர் சந்தையின் வெளியில், மழைநீர் வடிகால் அமைக்கப்படாததால், மழை நீர் குளம் போல் தேங்குகிறது. எனவே, உழவர் சந்தை வளாகம் மற்றும் பிரதான ரோட்டில், தளம் மற்றும் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

