/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
/
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
ADDED : ஜன 16, 2024 10:47 PM
உடுமலை;நகரின் பிரதான வீதிகள் மட்டுமின்றி, குடியிருப்பை ஒட்டிய ரோடுகளிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
உடுமலை நகரில், சமீப காலமாக வாகனங்களில் இயக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப 'பார்க்கிங்' வசதி இல்லாததால், நெரிசல் ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க, வீதிகளை ஆக்கிரமித்து ஒவ்வொரு கடைகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல், பாதசாரிகள், பாதுகாப்புடன் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டாலும், அங்கும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.
இதனால், வணிக ரீதியாக, நகருக்கு வந்து செல்லும் மக்கள், ரோட்டில் நடந்து செல்வதாலும், அவ்வப்போது ரோட்டை கடக்க முயற்சிப்பதாலும், போக்குவரத்து பாதிக்கிறது. இது ஒருபுறமிருக்கு, கடைகளுக்கு முன், வைக்கப்படும் விளம்பர பலகைகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், வாகனங்கள் நிறுத்துவதற்கும் தடையாக உள்ளது. இது மட்டுமின்றி, நகரில் முக்கிய வீதிகள் மட்டுமின்றி குடியிருப்பு வீடுகளை ஒட்டிய ரோடுகளிலும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், ரோடு திருப்பங்களில் வாகனங்களால் விபத்து அதிகரிக்கிறது.
அவ்வப்போது, துறை ரீதியாக முறையாக ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களைக் கண்டறிந்து, போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

