/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜூன் 13, 2025 09:44 PM

உடுமலை; உடுமலை மலையாண்டிபட்டணத்தில், மதுரை வீரன் சமேத பொம்மி அம்மாள் வெள்ளை அம்மாள் கோவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
உடுமலை அருகே மலையாண்டிபட்டணத்தில், மதுரை வீரன் சமேத பொம்மி அம்மாள் வெள்ளை அம்மாள் கோவில் திருவிழா, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
மூன்று நாட்கள் நடந்த திருவிழாவில், முதல் நாளில் தீர்த்தம் எடுத்தல், கும்ப அலங்காரம், சக்தி அழைத்தல் வழிபாடுகள் நடந்தன.
மறுநாள் காலை, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பக்தர்கள் மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்தும், உருவார பொம்மைகள் வைத்தும் வழிபட்டனர். இறுதி நாளில் பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.
சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.