ADDED : ஜூன் 04, 2025 01:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேற்கு பல்லடம் அரசு நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் விஸ்வநாதன் மற்றும் தலைமை ஆசிரியர் விஜயராணி ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்பு, பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர். மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நகராட்சி வார்டு கவுன்சிலர் வசந்தாமணி தங்கவேல் மற்றும் பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்லடம், ராயர்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியிலும் மாணவர்களுக்கு மலர் துாவி, இனிப்பு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியை தாரகேஸ்வரி மாணவர்களை வரவேற்றார். கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.