/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழைய குற்றவாளிகள் 1200 பேர் எங்கே? மாநகர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
/
பழைய குற்றவாளிகள் 1200 பேர் எங்கே? மாநகர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
பழைய குற்றவாளிகள் 1200 பேர் எங்கே? மாநகர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
பழைய குற்றவாளிகள் 1200 பேர் எங்கே? மாநகர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
ADDED : ஜூன் 15, 2025 11:36 PM

திருப்பூர்; டி.ஜி.பி., உத்தரவுப்படி 15 ஆண்டுகள் பழைய குற்றவாளிகள் கணக்கெடுப்பின்போது, திருப்பூர் மாநகரில் மட்டும் ஆயிரத்து 200 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இவர்களைக் கண்டறிய போலீசார் தீவிரம் காட்டுகின்றனர்.
கொங்கு மண்டல பகுதியான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சமீப காலமாக தோட்டத்து வீடுகளை குறி வைத்து முதியவர்களை நோட்டமிட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, மூன்று பேர் கொலை; ஈரோடு சிவகிரியில் மூத்த தம்பதி கொலை ஆகியன மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
போலீஸ் விழிப்புணர்வு
குற்ற தடுப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், தங்கள் எல்லைக்கு உட்பட்ட தோட்டத்து வீடு, தனி வீடு மற்றும் தனியாக வசிக்கும் மூத்த தம்பதி வீடுகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து நடவடிக்கை மற்றும் சந்தேக நபர்கள் குறித்து தொடர்பு கொள்ள விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
டி.ஜி.பி., உத்தரவு
சிவகிரி கொலை வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கொலையில் தொடர்புடைய முக்கியமான நபர்களான, மூன்று பேரும் கடந்த இதுபோன்று பல கொலைகளை அரங்கேற்றி விட்டு, போலீசாரிடம் சிக்காமல் இருந்தது தெரிந்தது.
மூன்று பேரும் கடந்த, 2015ம் ஆண்டு வரை திருட்டு, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள், அதன் பின், பத்து ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்கவில்லை.
இதையடுத்து, 2011 முதல், 2025 வரை என, 15 ஆண்டுகளில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை செய்து கொள்ளையடித்தல் போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளை தற்போதைய நிலையை கண்டறியும் வகையில் தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க டி.ஜி.பி., உத்தரவிட்டிருந்தார்.
1,200 பேர் மாயம்
திருப்பூர் போலீசார் கூறியதாவது:
குற்றத்தில் ஈடுபட்ட உள்ளூர் நபர்கள், வெளியூரில் இருந்து வந்து ஈடுபட்டவர்கள் மற்றும் திருப்பூரில் இருந்து வெளியூர்களில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என, தனித்தனியாக பிரித்து போலீசார் கணக்கெடுக்கப்படுகிறது.
அதில், திருப்பூர் மாநகரில் மட்டும் ஆயிரத்து 600 பேர் குறித்த தகவல்களை கணக்கெடுக்க வேண்டியிருந்தது. இதில், 400 பேரின் நிலை மட்டும் அடையாளம் காணப்பட்டது.
மீதமுள்ள 1,200 பேர் எங்கு உள்ளார்கள், இடம் பெயர்ந்தவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்பதை சேகரிக்க வேண்டியுள்ளது. இவர்களை தேடி வருகிறோம். இந்த விபரங்கள் தற்போது சேகரிக்கப்படும் போது, எதிர்காலத்தில் போலீஸ் விசாரணைக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.