sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திடீரென மாயமான மலைக்கோவில் அடையாளம் இன்றி அகற்றியது யார்?

/

திடீரென மாயமான மலைக்கோவில் அடையாளம் இன்றி அகற்றியது யார்?

திடீரென மாயமான மலைக்கோவில் அடையாளம் இன்றி அகற்றியது யார்?

திடீரென மாயமான மலைக்கோவில் அடையாளம் இன்றி அகற்றியது யார்?


UPDATED : செப் 21, 2025 02:02 AM

ADDED : செப் 21, 2025 02:01 AM

Google News

UPDATED : செப் 21, 2025 02:02 AM ADDED : செப் 21, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்:மங்கலம் அருகே சிறிய மலைக்குன்றின் மீது இருந்த கோவில் திடீரென மாயமானதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம், மங்கலம் அரசுப்பள்ளி அருகே சிறிய மலை குன்றின் மேல், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதேசிலிங்கம் கோவில் இருந்தது.

Image 1472121


பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலைமீது ஏறி சிவபெருமானை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

திடீரென, மலை மீது இருந்த கோவில் மாயமானது. தகவலறிந்த பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு நிர்வாகி அண்ணாதுரை தலைமையிலான சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் மங்கலம் மலைக்கோவில் சென்று பார்வையிட்டனர்.



அண்ணாதுரை கூறியதாவது:

மங்கலம் மலைக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. மலை மீது சிவபெருமான் அருள்பாலிப்பது எங்கும் இல்லாத சிறப்பு. இப்படிப்பட்ட கோவிலை முறையாக பராமரிக்காமல், அறநிலைய துறை பாழ்படுத்தி வருகிறது. கோவில் முன் மண்டபம் கரையான் அரித்து சேதமடைந்துள்ளது.

ஆன்மிகத்தை வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை இவ்வாறு அவல நிலையில் கோவிலை வைத்துள்ளது.

பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள இக்கோவில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென மாயமாகி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கோவில் பூசாரியை கேட்டால், புனரமைப்பதற்காக, இடித்து அகற்றப்பட்டதாக கூறுகிறார்.

இல்லாவிடில், கோவிலில் பாலாலயம் செய்திருக்க வேண்டும். அதற்கான அடையாளமே கோவிலில் இல்லை. கோவிலை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அறநிலையத்துறை செயல்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us