/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுகலான பாலத்தை விரிவுபடுத்துங்க!
/
குறுகலான பாலத்தை விரிவுபடுத்துங்க!
ADDED : ஜன 26, 2024 01:01 AM

உடுமலை;மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்டது பாப்பான்குளம் ஊராட்சி. இங்கு, 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
உடுமலை கிளை போக்குவரத்து கழகத்தில் இருந்து இக்கிராமத்துக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் பஸ்கள் இயக்கப்படுகிறது.
கொழுமம் ரோட்டில் இருந்து பிரிந்து, கிராமத்துக்கு செல்லும் ரோட்டில், அமராவதி பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. அக்கால்வாய் மீது முன்பு இருந்த ரோட்டின் அகலத்துக்கேற்ப, பாலம் கட்டப்பட்டது. பின்னர் ரோடு விரிவுபடுத்தப்பட்டதும், பாலம் மேம்படுத்தப்படவில்லை.
இதனால், இரவு நேரங்களில், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துகள் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் செல்வதிலும் சிக்கல் நீடிக்கிறது.
எனவே, பொதுப்பணித்துறையினர் பாலத்தை விரிவுபடுத்தி கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

