/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீஹயக்ரீவர் வழிபாடு; மனமுருகிய மாணவர்கள்
/
ஸ்ரீஹயக்ரீவர் வழிபாடு; மனமுருகிய மாணவர்கள்
ADDED : பிப் 12, 2024 12:48 AM

திருப்பூர்:பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் கருதி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 2, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கானசிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு, பட்டாச்சாரியார்களின் வேத பாராயணத்துடன், சிறப்பு வேள்வி பூஜைகள் துவங்கியது.
ேஹாமபூஜைகளை தொடர்ந்து, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் மூலவருக்கு மகா அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன; வழிபாட்டின் போது, நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல் பாராயணம் செய்யப்பட்டது. நாமசங்கீர்த்தனம், சாற்றுமறையை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.
மாணவ, மாணவியர் பெயர் மற்றும் நட்சத்திரத்துடன், லட்சுமி ஹயக்ரீவருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் படம், ஸ்லோகம் மற்றும் காயத்ரி மந்திரம் அடங்கிய கையேடும், கையில் கட்டிக்கொள்ள, பூஜையில் வைக்கப்பட்ட ரட்சையும் வழங்கப்பட்டது. அனைவருக்கும், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பிளஸ் 2, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கான சிறப்பு வழிபாடு, 18ம் தேதியும்; பத்தாம் வகுப்பு மாணவருக்கான வழிபாடு, 25 மற்றும் மார்ச் 3ம் தேதியும் நடைபெற உள்ளதாக திருவடி திருத்தொண்டு அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.

