/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
/
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
ADDED : ஜூன் 10, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த நெடும்பிறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். கூலித் தொழிலாளியான இவரின் மகன்கள் பரத், 12, சந்தோஷ், 8. இருவரும் முறையே, 6ம் வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு படித்து வந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் முரளி கிருஷ்ணன் மகன் சாய்சரண், 10, ஐந்தாம் வகுப்பு மாணவன்.
அப்பகுதியிலுள்ள குளத்தில் குளிக்க நேற்று மதியம் மூவரும் சென்றனர். நீச்சல் தெரியாத நிலையில் மூவரும் மூழ்கி இறந்தனர். குளத்தில் சிறுவன் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின்படி, கிராம மக்கள் சேர்ந்து குளத்தில் இறங்கி தேடினர்.அப்போது பரத், சந்தோஷ், மற்றும் சாய்சரண் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.