/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மது விற்ற தகராறில் கொலை: தப்பியோடிய 3 பேர் கைது
/
மது விற்ற தகராறில் கொலை: தப்பியோடிய 3 பேர் கைது
UPDATED : ஜன 17, 2024 01:25 PM
ADDED : ஜன 17, 2024 01:21 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இரு தரப்பினரிடையே மது விற்பனையில் ஏற்பட்ட மோதலில், ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை, அருணகிரிபுரத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம், 35; மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள், அருண்குமார், 27, இவரது தம்பி உதயா, 21; இவர்களது நண்பர் தரணிதரன், 27; இரு தரப்பினரும் கள்ளச்சந்தையில் மது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, மது விற்பனை மற்றும் பணம் தொடர்பாக, இரு தரப்பிரனரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த அருண்குமார், உதயா மற்றும் தரணிதரன் ஆகிய மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தியதில், ராஜரத்தினம் சம்பவ இடத்திலேயே பலியானார். திருவண்ணாமலை டவுன் போலீசார், தப்பியோடிய அருண்குமார், உதயா மற்றும் தரணிதரன் ஆகியோரை, நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

