/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி
/
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி
பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: இளம்பெண் உட்பட 2 பேர் பலி
ADDED : ஜன 17, 2024 01:24 PM
கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே, பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இளம்பெண் உட்பட இருவர் பலியாயினர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் சஞ்சீவி, 22; இவர், நேற்று முன்தினம் மாலை, காந்தப்பாளையம் வழியாக, போளூருக்கு ஹோண்டா பைக்கில் சென்றார். காந்தப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் கவிப்பிரியா, 20; இவரது அண்ணன் மணி, 23; இவர்கள் இருவரும், ஆதமங்கலம் கிராமத்திற்கு ஹீரோ பைக்கில் சென்றனர். காந்தப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே, இருவர் சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதின. இதில் ஹெல்மெட் அணியாமல் சென்ற, 3 பேரும் படுகாயமடைந்து, ஆதமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதலுதவிக்கு பின், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவிதாவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிரஞ்சீவியும் பலியாகினர். விபத்து குறித்து, கடலாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

