/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
சிறுமியிடம் சீண்டல் தொழிலாளி கைது
/
சிறுமியிடம் சீண்டல் தொழிலாளி கைது
ADDED : ஜன 27, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அடுத்த இனாம் காரியந்தலை சேர்ந்தவர் சேட்டு, 54, கூலி தொழிலாளி. இவர், சில நாட்களுக்கு முன், 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
சிறுமி கூச்சலிட்டதால், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவர் அங்கிருந்து தப்பி சென்றார். சிறுமியின் தாய் வீடு திரும்பியதும், தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து கூறினார்.
புகாரின்படி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார், கூலி தொழிலாளி சேட்டுவை கைது செய்தனர்.

