/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
மது வாங்க பணம் கேட்டு விவசாயி மண்டை உடைப்பு
/
மது வாங்க பணம் கேட்டு விவசாயி மண்டை உடைப்பு
ADDED : ஜூன் 26, 2025 02:28 AM
செங்கம், செங்கம் அருகே, மது வாங்க பணம் கேட்டு, விவசாய நிலத்திற்கு நடந்து சென்ற விவசாயியை இருவர் தாக்கியதில், அவரது மண்டை உடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை, 43. இவரது விவசாய நிலம் அப்பகுதியில் டாஸ்மாக் கடை அருகே உள்ளது. நேற்று விவசாய நிலத்திற்கு சென்று பணியை முடித்து விட்டு வீடு திரும்பியபோது, டாஸ்மாக் கடை அருகே அடையாளம் தெரியாத இருவர், ஏழுமலையை வழிமறித்து மது வாங்க பணம் கேட்டு மிரட்டினர். ஏழுமலை பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் தாக்கியதில், ஏழுமலையின் மண்டை உடைந்து பலத்த காயமடைந்தார். செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.