/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
'கண்டா வரச்சொல்லுங்க' இது தேர்தல் கால சீசன்
/
'கண்டா வரச்சொல்லுங்க' இது தேர்தல் கால சீசன்
ADDED : பிப் 29, 2024 08:48 PM
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் 'கண்டா வரச்சொல்லுங்க' என்று கூறி, தொகுதி எம்.பி.,யை காணவில்லை என்ற போஸ்டர், நகர் முழுதும் ஒட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை லோக்சபா தொகுதி எம்.பி.,யாக, அண்ணாதுரை உள்ளார். மக்களிடம் எளிமையாக பழகக்கூடியவர். திருமணம், கோவில் திருவிழா அழைப்பு வந்தால் தவறாமல் பங்கேற்பார்.
தனி ஆவர்த்தனம் செய்யாமல், அமைச்சர் வேலு பேச்சை தட்டாமல், விசுவாசமாக செயல்படுபவர். எம்.பி., நிதியில் எந்த பணி நடந்தாலும், அமைச்சரை கொண்டே துவக்கிவைப்பார்.
தற்போது வரவுள்ள தேர்தலில், அமைச்சர் வேலு மகன் கம்பன் போட்டியிட போவதாக, இரு மாதங்களுக்கு முன், திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குக்கர் வழங்கினர்.
இதனால், 'அண்ணாதுரைக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, தி.மு.க.,வினர் மத்தியில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில், 'கண்டா வரச்சொல்லுங்க' தொகுதி எம்.பி.,யை எங்கேயும் காணவில்லை என்ற போஸ்டர், திருவண்ணாமலை நகர் முழுதும் ஒட்டப்பட்டுள்ளது.
சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில், இதுபோன்ற போஸ்டர் ஒட்டுவது அதிகரித்துள்ளது. மாம்பழ சீசன் போல இது, தேர்தல் சீசன் என, மக்கள் கருத துவங்கிவிட்டனர்.

