/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
அனுமதியில்லா சேவல் சண்டை 12 பேர் கைது; பணம் பறிமுதல்
/
அனுமதியில்லா சேவல் சண்டை 12 பேர் கைது; பணம் பறிமுதல்
அனுமதியில்லா சேவல் சண்டை 12 பேர் கைது; பணம் பறிமுதல்
அனுமதியில்லா சேவல் சண்டை 12 பேர் கைது; பணம் பறிமுதல்
ADDED : ஜன 17, 2024 12:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே பிச்சாண்டவர் கோவில் கிழக்கு வீதி ஒதுக்குப்புறமான இடத்தில், நேற்று முன்தினம் மாலையில், சேவல் சண்டை நடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று போலீசார் பார்த்தபோது, தடை செய்யப்பட்ட சேவல் சண்டையை சிலர் நடத்திக் கொண்டிருந்தனர்.
சேவல் சண்டையில் ஈடுபட்ட, திருச்சி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 19 - 38 வயதுடைய 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த, நான்கு சண்டைச் சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், 10 மொபைல் போன்கள், 6 டூ-வீலர்கள், 7,500 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.