/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் சிக்கினார்
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் சிக்கினார்
ADDED : ஜூன் 13, 2025 01:57 AM
திருச்சி:காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, கே.கே.நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அறிவுச்செல்வி பெயரில், கொட்டப்பட்டு பகுதியில் காலிமனை வாங்கி உள்ளார். அந்த மனைக்கு வரி நிர்ணயம் செய்ய விண்ணப்பித்த சீனிவாசன், இது தொடர்பாக பொன்மலை கோட்டத்தில் பில் கலெக்டரான செபஸ் தியன், 56, என்பவரை அணுகிய போது, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
தர விரும்பாத சீனிவாசன், நேற்று முன்தினம், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். நேற்று காலை தன் அலுவலகத்தில், சீனிவாசனிடம் லஞ்சப்பணம், 10,000 ரூபாயை வாங்கிய செபஸ்தியனை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். மேலும், அவரது அலுவலகத்தில் இருந்து, 24,000 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.