ADDED : செப் 20, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:சொத்து பிரச்னையால் ஏற்பட்ட தகராறில், இரும்பு குழாயால் அண்ணனை அடித்து கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, மட்டப்பாறைபட்டியை சேர்ந்த சகோதரர்கள் அரசன், 70, பழனியாண்டி, 65. இருவருக்கும் பூர்விக சொத்தான, 10 ஏக்கர் நிலத்தை பங்கு பிரிப்பதில் பிரச்னை இருந்தது.
நேற்று முன்தினம் மாலை அண்ணன், தம்பி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், அருகில் கிடந்த இரும்பு குழாயால் அண்ணன் தலையில் தம்பி தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அரசன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். வையம்பட்டி போலீசார், பழனியாண்டியை கைது செய்தனர்.