/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சியில் கருணாநிதி சிலை வீடியோ கான்பரன்சில் திறப்பு
/
திருச்சியில் கருணாநிதி சிலை வீடியோ கான்பரன்சில் திறப்பு
திருச்சியில் கருணாநிதி சிலை வீடியோ கான்பரன்சில் திறப்பு
திருச்சியில் கருணாநிதி சிலை வீடியோ கான்பரன்சில் திறப்பு
ADDED : ஜன 26, 2024 01:10 AM

திருச்சி:மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமாக இருந்த கருணாநிதிக்கு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் அருகே முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்ட சிலையை, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன் மூலம் திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று காலை, தி.மு.க., இளைஞரணி செயலரும், அமைச்சருமான உதயநிதி, சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம், கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், திருச்சியில் அமைச்சர்கள் நேரு, மகேஷ், மேயர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
உதயநிதி சிலையை திறந்ததால், முதல்வருக்கு என்னவாயிற்று என்று தி.மு.க., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'தொடர்ந்து பணியாற்றியதால் முதல்வர் சோர்ந்து விட்டார். ஆகையால், அவர் தற்போது ஓய்வில் உள்ளார். அதனால் தான், அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்' என்றனர்.

