sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

பஸ் வசதி இல்லாத பள்ளிக்கு வேன் ஏற்பாடு செய்த மக்கள்

/

பஸ் வசதி இல்லாத பள்ளிக்கு வேன் ஏற்பாடு செய்த மக்கள்

பஸ் வசதி இல்லாத பள்ளிக்கு வேன் ஏற்பாடு செய்த மக்கள்

பஸ் வசதி இல்லாத பள்ளிக்கு வேன் ஏற்பாடு செய்த மக்கள்

1


ADDED : ஜூன் 03, 2025 07:19 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 07:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கஸ்பா பொய்கைப்பட்டியில், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

இந்த கிராமத்துக்கு பள்ளி நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ், கோடை விடுமுறையில் நிறுத்தப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், இந்த கிராமத்துக்கு மீண்டும் பஸ் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், கீழகோட்டாம்பட்டியைச் சேர்ந்த, 21 மாணவ - மாணவியர் இந்த பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையிலும், போக்குவரத்து வசதிக்காகவும், இந்த பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து, வேன் ஏற்பாடு செய்துள்ளனர். புதிதாக சேர்ந்த மாணவ - மாணவியரை, அந்த வேனில் அழைத்து வந்து, இனிப்பு கொடுத்து வரவேற்றனர். அமைச்சர் மகேஷின் சொந்த மாவட்டத்தில், பஸ் வசதியின்றி தவித்த பள்ளி மாணவர்களுக்கு கிராம மக்கள் சொந்த செலவில் வாகன வசதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us