/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வங்கி ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு
/
வங்கி ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு
ADDED : ஜூலை 24, 2024 08:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த குகையநல்லுாரை சேர்ந்தவர் பானுமதி, 57, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஊழியர். இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி, பணிக்கு சென்றார். பணி முடிந்து இரவு, 7:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது கதவின் பூட்டை உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த, 25 சவரன் நகை மற்றும் 2.50 லட்சம் ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.