/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சிறுமி பலாத்காரம் காமுகனுக்கு '20 ஆண்டு'
/
சிறுமி பலாத்காரம் காமுகனுக்கு '20 ஆண்டு'
ADDED : ஜன 21, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார் : வேலுார் மாவட்டம், சதுப்பேரியை சேர்ந்தவர் எட்வின், 34; எல்.ஐ.சி., தற்காலிக ஊழியர். இவர், 2019ல், வீட்டில் தனியாக இருந்த, 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மாணவி கர்ப்பமானார். வேலுார் அனைத்து மகளிர் போலீசார், எட்வினை போக்சோவில் கைது செய்தனர்.
வேலுார் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி வழக்கை விசாரித்து, எட்வினுக்கு, 20 ஆண்டு சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று முன்தினம் மாலை தீர்ப்பளித்தார்.

