/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

ADDED : செப் 28, 2025 03:10 AM
காட்பாடி:வேலுாரில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வேலுார் மாவட்டத்திற்கு, 2022 - 23ல் தமிழக அரசின் பட்ஜெட்டில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில், 250 ஏக்கரில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
தற்போது, காதிரெட்டி, பள்ளி பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்தம் பணியில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு, அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'நாங்கள் பல தலைமுறைகளாக எங்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதாக கூறி, எங்களை இந்த பகுதியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.
மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ச்சியாக மனு அளித்து வருகிறோம். அவர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.