/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தந்தை இறந்த துக்கத்தில் மாணவி தற்கொலை
/
தந்தை இறந்த துக்கத்தில் மாணவி தற்கொலை
ADDED : ஜன 17, 2024 01:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம்: வேலுார் மாவட்டம், குடியாத்தம், தங்கம் நகரை சேர்ந்தவர் முன்னா, 56; இவர் மகள் அப்சரா, 19; தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், முன்னா உடல்நிலை பாதித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதில், மனவேதனையில் இருந்த, அப்சரா நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை கொண்டார். குடியாத்தம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

