/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டேரிப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதற்கு நடவடிக்கை தேவை
/
கூட்டேரிப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதற்கு நடவடிக்கை தேவை
கூட்டேரிப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதற்கு நடவடிக்கை தேவை
கூட்டேரிப்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதற்கு நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 13, 2024 12:08 AM

மயிலம்: விழுப்புரம் மார்கத்திலிருந்து வரும் பஸ்கள், கூட்டேரிப்பட்டு பஸ் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு பகுதியில் தற்போது மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக தற்பொழுது விழுப்புரம் மார்க்கத்தில் சர்வீஸ் ரோட்டில் உள்ளூர் பஸ்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது.
சர்வீஸ் ரோட்டில் கார் மற்றும் லாரிகள் கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்கிறது. சாலையில் நான்கு முனை சந்திப்பு அருகிலேயே பஸ்களை நிறுத்தி பொதுமக்களை ஏற்றி, இறக்கி விடுவதால் அடிக்கடி இந்த பகுதியில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை, முகூர்த்த தினங்களில் மிக அதிகமான வாகனங்கள் செல்லும் பொழுது டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு விழுப்புரம் மார்க்கத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்தம் அருகே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கினால் டிராபிக் ஜாம் பிரச்னையை தற்காலிகமாக தீர்வு ஏற்படும்.
பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு மயிலம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.