/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தந்தை, மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
தந்தை, மகனை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 21, 2024 04:35 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பைக்கில் சென்ற தந்தை, மகனைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த நன்னாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 64; இவரது மகன் சதீஷ்குமார், 34; விவசாயிகள். இவர்கள், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து பைக்கில் விழுப்புரம் நோக்கிச் சென்றனர்.
நன்னாடு மெயின்ரோட்டில் பைக்குகளை சாலையில் நிறுத்தி வைத்திருந்த, தோகைப்பாடியைச் சேர்ந்த முனுசாமி மகன் ஜெயசுதன், 18; பெரும்பாக்கம் நாராயணன் மகன் சக்திவேல், 19; உள்ளிட்ட 4 பேரிடம், பைக்குகளை ஓரமாக நிறுத்தும்படி கூறியுள்ளனர்.
அப்போது, ஏற்பட்ட தகராறில், ஜெயசுதன் உள்ளிட்ட 4 பேரும், தட்சணாமூர்த்தி, சதீஷ்குமார் ஆகியோரை கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து, ஜெயசுதன், சக்திவேல் உள்ளிட்ட 4 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.