/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு முழு மாதிரி தேர்வுக்கு அழைப்பு
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு முழு மாதிரி தேர்வுக்கு அழைப்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு முழு மாதிரி தேர்வுக்கு அழைப்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு முழு மாதிரி தேர்வுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 23, 2024 05:45 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான முழு மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13ம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்த முதல்நிலை தேர்வுக்குண்டான முழு மாதிரி தேர்வுகள் நாளை 24ம் தேதியும், 27 மற்றும் ஜூலை 2, 5ம் தேதிகளில் காலை 9:30 மணிக்கு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட் போட்டோவுடன் நேரில் வந்து மாதிரி தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.