/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் சுய உதவிக்குழு பெயரில் பணம் மோசடி: கலெக்டர் அலுவலகத்தில் மனு கலெக்டரிடம் புகார் மனு

ADDED : ஜூலை 16, 2024 12:25 AM

விழுப்புரம்: மகளிர் சுயஉதவிக் குழு பெயரில் வங்கியில் கடன் பெற்று பணம் மோசடி செய்தவர்கள் நடவடிக்கைக் கோரி, கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், சிறுவாக்கூர் கிராம மக்கள் அளித்த புகார் மனு:
எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டம் வழியாக வங்கி மூலம் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் கடன் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது.
எங்கள் கிராமத்தில் மொத்தம் 11 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இந்த குழுவிற்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 55 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்கப்பட்டது.
மீதமுள்ள 75 லட்சம் ரூபாயை தனிப்பட்ட சிலர், மகளிர் சுயஉதவி குழுக்களின் பெயரில் கையாடல் செய்து மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி பணம் மோசடி செய்தோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.