/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழையில் நனைந்த நெல் மணிகள் முளைப்பு திருவெண்ணெய்நல்லுாரில் விவசாயிகள் கவலை
/
மழையில் நனைந்த நெல் மணிகள் முளைப்பு திருவெண்ணெய்நல்லுாரில் விவசாயிகள் கவலை
மழையில் நனைந்த நெல் மணிகள் முளைப்பு திருவெண்ணெய்நல்லுாரில் விவசாயிகள் கவலை
மழையில் நனைந்த நெல் மணிகள் முளைப்பு திருவெண்ணெய்நல்லுாரில் விவசாயிகள் கவலை
ADDED : ஜூன் 15, 2024 06:27 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட நெல் மணிகள் முளைத்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை பஸ் நிறுத்தம் அருகே நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு சித்திரை பட்டம் அறுவடை முடிந்து விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர்.
ஆனால், இங்கு கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள நெல்களை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக எடை போடாமல் வைத்துள்ளனர். கொள்முதல் நிலையத்தில் ெஷட் ஏதும் இல்லாததால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நெல்கள் நனைந்து, நெல் மணிகள் முளைப்பு விட்டுள்ளன.
இதனால் நெல் விலை போகாமல் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நெல் மூட்டை பிடிக்க சாக்குகள் கொண்டு வரப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை எடைபோடாமல் வைத்திருப்பது விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தி அங்கு கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்களை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.