/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தெற்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
தெற்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 15, 2024 06:33 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், தெற்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், விக்கிரவாண்டி வேட்பாளர் சிவா, மாவட்ட துணைச் செயலாளர்கள் கற்பகம், முருகன், தேன்மொழி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார்.
நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா, ஒன்றிய செயலாளர் ராஜா, தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, முருகவேல், முருகன், நகர இளைஞரணி மணிகண்டன், செல்வா ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி பேசுகையில், 'விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வின் வளர்ச்சிக்கு உழைப்பதற்காக, பொறுப்பாளராக எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். தலைமையின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில் கடந்த 1992ம் ஆண்டு மிகப்பெரிய பிளவு ஏற்பட்ட நேரத்தில், அமைச்சர் பொன்முடி தீவிரமாக பணியாற்றி ஒருங்கிணைத்தார். கடந்த 1989ம் ஆண்டு முதல், நான் பள்ளி சிறுவனாக படித்த காலம் முதல் 37 ஆண்டுகள் கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
படிப்படியாக உழைத்ததன் விளைவாக தற்போது பதவி வழங்கியிருக்கின்றனர். அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க., வெற்றி வாகை சூடி, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கவுதம சிகாமணியை நியமித்த தலைமைக்கு நன்றி தெரிவிப்பது. இன்று 15ம் தேதி கோவையில் நடக்கும் முப்பெரும் விழாவில் திரளாக பங்கேற்பது. இடைத் தேர்தலில் வேட்பாளர் சிவாவை வெற்றி பெறவைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.