/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வரும்: ராமதாஸ் நம்பிக்கை
/
எங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வரும்: ராமதாஸ் நம்பிக்கை
எங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வரும்: ராமதாஸ் நம்பிக்கை
எங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வரும்: ராமதாஸ் நம்பிக்கை
ADDED : ஜூலை 16, 2024 04:10 PM

திண்டிவனம்: 'தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக பா.ம.க.,வின் பின்னால் வரும்போது ஒளிமயான எதிர்காலம் நிச்சயம் கிடைக்கும்' என கட்சியின் 36வது ஆண்டு துவக்க விழாவில் பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
பா.ம.க.,வின் 36வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சிக் கொடியேற்றி, கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பா.ம.க., சமத்துவம், சமூக ஜனநாயகம், சமூக நீதி என்ற உன்னதமான கொள்கையின் அடிப்படையில் 35 ஆண்டுகாலம் முடிந்து 36 ஆண்டு துவக்க விழாவை நடத்துகிறது. தொடர்ந்து மக்களுக்காக பாடுபட்டு வரும் பா.ம.க.,வை தமிழக மக்களுக்கு ஏனோ தெரியவில்லை. பெரிய அளவிலும் ஆதரவு தரவில்லை.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதுபோன்று கொள்கை உடைய 35 ஆண்டுகளாக, தமிழகத்தின் மக்கள் பிரச்னைகளுக்காக, போராடிக் கொண்டிருந்தாலும், மக்கள் என் பின்னால் முழுதுமாக வரத் தயங்குகின்றனர். ஆனால் எதிர்காலத்தில் தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக பா.ம.க.,வின் பின்னால் வரும்போது, ஒளிமயான எதிர்காலம் நிச்சயம் கிடைக்கும்.
மின் கட்டண உயர்வு அறிவிப்பு வரும் என நான் ஏற்கனவே பல முறை கூறியிருக்கிறேன். தற்போது அறிவித்து விட்டார்கள். தமிழக மக்களை தேர்தல் நேரத்தில் 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என விலை கொடுத்து வாங்கி, பிறகு மின் கட்டணத்தை ஏற்றிவிட்டனர். தேர்தல் நேரத்தில் டோக்கன் உள்ளிட்ட பொருட்களுக்கு அடிமையாகிப் போன தமிழக மக்களுக்கு என்ன சொல்வது.
தமிழக மக்களுக்காக பா.ம.க.,பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்காக போராடி வருகிறது. மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.