sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ்சில் நகை திருட்டு 2 பெண்கள் கைது

/

பஸ்சில் நகை திருட்டு 2 பெண்கள் கைது

பஸ்சில் நகை திருட்டு 2 பெண்கள் கைது

பஸ்சில் நகை திருட்டு 2 பெண்கள் கைது


ADDED : மார் 19, 2025 04:51 AM

Google News

ADDED : மார் 19, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 5 சவரன் நகை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் மனைவி ஷாலினி, 32; மரக்காணத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற ஷாலினி, நேற்று மாலை மேல்வாலைக்கு தனியார் பஸ்சில் வந்தார்.

பஸ் நிறுத்தத்தில் இறங்கி கைப்பையை பார்த்த போது அதில் வைத்திருந்த 5 சவரன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், 2 பெண்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

இருவரும் திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்த போலீசார் உடனடியாக சென்று அவர்களை பிடித்து விசாரித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தெய்வமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவிகள் காவியா, 30; பல்லவி, 32; என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த செயின், வளையல் உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us