sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயிலம் பொறியியல் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா

/

மயிலம் பொறியியல் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா

மயிலம் பொறியியல் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா

மயிலம் பொறியியல் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா


ADDED : மே 28, 2025 11:55 PM

Google News

ADDED : மே 28, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் 2023 மற்றும் 2024ம் ஆண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லுாரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், இணை வேந்தர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். இயக்குநர் செந்தில் வரவேற்றார்.

மைபிரீனியரின் நிறுவனர் சுரேஷ் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றி, கடந்த 2023 மற்றும் 2024ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டம், பதக்கம் வழங்கினார். முதல்வர் ராஜப்பன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில், அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு கல்லுாரி சார்பில் தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இளநிலை பிரிவில் இயந்திரவியல் துறையில் 71 பேர், கணிப்பொறியியல் துறையில் 202 பேரும், மின்னணுவியல் துறையில் 39 பேரும், கட்டடவியல் துறையில் 21 பேரும், தகவல் தொழில்நுட்ப துறையில் 87 பேரும் என மொத்தம் 504 பேர் பட்டம் பெற்றனர்.

முதுநிலை பிரிவில் கணினி பயன்பாட்டியியல் துறையில் 104 மாணவர்களுக்கும், மேலாண்மை துறையில் 207 மாணவர்களுக்கும், எம்.இ., கம்யூனிகேஷன் சிஸ்டம் துறையில் ஒரு மாணவரும், எம்.இ., கணிப்பொறியல் துறையில் 7 பேரும், எம்.இ., பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ் துறையில் ஒருவரும், எம்.இ., டிசைன் இன்ஜீனியரிங் துறையில் 4 பேரும் என மொதம்ம் 324 பேர் பட்டம் பெற்றனர்.

விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் கணேசன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us