ADDED : மே 26, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வானுார் அடுத்த பூத்துறையில் சூதாட்டம் நடப்பதாக ஆரோவில் போலீசாருக்கு புகார் சென்றது. சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய புதுச்சேரி முத்திரைப்பாளையம், காந்தி திருநல்லுார் குமார், 51; குருமாம்பேட் காந்திராஜ், 48; கொடாத்தூர் அடுத்த கைக்கிளைப்பட்டு தமிழரசன், 31; ஆகிய 3 பேரை கைது செய்து, 6,000 ரூபாய், 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.