/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்க எம்.பி.,க்கள் குறைந்தால் முதல் ஆளாக தி.மு.க., நிற்கும் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஆருடம்

ADDED : ஜன 27, 2024 06:41 AM
விழுப்புரம் : மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்க, எம்.பி.,க்கள் குறைந்தால், முதல் ஆளாக தி.மு.க., அங்கு போய் நிற்க தயங்காது என மாஜி அ.தி.மு.க., அமைச்சர் பேசினார்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில், வளவனுார் கடைவீதியில் நடைபெற்ற கூட்டத்தில், அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும், தமிழ் மொழியை அழிப்பதற்கும், ஒடுக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். காங்.,- பாஜ., இரு கட்சிகளும், இந்த விஷயத்தில் ஒரே நோக்கத்தில் செயல்படுகின்றனர்.
தமிழகத்தில், மோடி ஆட்சியை அகற்றியே தீருவோம் என ஆவேசமாக பேசுபவர்கள், டில்லி சென்றால், மத்திய ஆட்சியாளர்களிடம் கெஞ்சி, தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.
வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவாக ஓட்டளித்தால், அது பா.ஜ.,விற்கு ஆதரவான ஓட்டுதான். மத்தியில் ஒரு வேளை பா.ஜ., ஆட்சி அமைப்பதற்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எம்.பி.,க்கள் குறைந்தால், முதல் ஆளாக தி.மு.க., அங்கு போய் நிற்கும். தங்களது ஆதரவை தருவதாகவும், ஒரு சில அமைச்சர் பதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என கேட்பார்கள்.
கடந்த நான்கரை ஆண்டுகளில், தி.மு.க., இத்தனை எம்.பி.,க்களை வைத்துக் கொண்டு, தமிழக நலனுக்காக கொண்டு வந்த முத்கியமான திட்டங்கள் கிடையாது.
இவற்றையெல்லாம் சிந்தித்து பார்த்து, வரும் தேர்தலில் தமிழகத்தை சூழ்ந்துள்ள ஆபத்தை போக்கிடும் வகையில், அ.தி.மு.க.,விற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், என்று சண்முகம் பேசினார்.