/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏ.ஐ.டி.யு.சி., தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
ஏ.ஐ.டி.யு.சி., தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 29, 2024 11:41 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிலாளர் சங்கம் சார்பில், கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் ஜெயமலர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கீர்த்தி, துணை செயலாளர் அரசு, துணை தலைவர்கள் வசந்தராஜ், ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர் சவுரிராஜன் சிறப்புரையாற்றினார்.
ஆப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களின் மத்திய சட்டங்களை கலைக்க கூடாது. அதனை முறையாக செயல்படுத்த வேண்டும். நல வரியை 5 சதவீதம் வசூல் செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். நலவாரியம் மூலமாக மருத்துவ வசதி, காப்பீடு பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். ஆர்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திவ்யா, ஆரோக்கியதாஸ், சங்கர், நிர்வாகக் குழு முத்துசாமி, ராஜாராம், குணசேகரன் உட்பட சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

