/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆலம்பூண்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
ஆலம்பூண்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஆலம்பூண்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஆலம்பூண்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : மே 26, 2025 12:47 AM

செஞ்சி : ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 25 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1998 - -2000 ஆண்டில், பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, வெள்ளி விழா மற்றும் முன்னாள் ஆசிரியர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் எட்வின் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் ஆசிரியர்கள் மேரி சேவியர், மோகன் குமார், கணபதி, தேவதாஸ், உதயசூரியன், எல்லப்பன் ஆகியோருக்கு, முன்னாள் மாணவர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
தற்போது பணி புரியும் ஆசிரியர்கள் தண்டபாணி, ஏழுமலை, முருகன், ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் ஆசிரியர்கள் கேக் வெட்டி முன்னாள் மாணவர்களுக்கு வழங்கினர். 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள், தங்களின் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.