தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


ADDED : மே 24, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 05:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1989-1990ம் ஆண்டு 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் காந்தரூபி முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணை குழு அமுதா வரவேற்றார்.

முன்னாள் மாணவர்கள், தங்களது ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். முன்னதாக, முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளியில் அமைக்கப்பட்ட 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நுழைவு வாயில் மற்றும் கேட் ஆகியவற்றை, மாவட்ட கல்வி அலுவலர் உதயசூரியன் திறந்து வைத்தார்.

விழா ஒருங்கிணைப்பு குழு சங்கர், சக்திவேல், நாகராஜ், செல்வபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். எழிலரசி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us