/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்புக்கரங்கள் திட்டம் துவக்கம் : எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
/
அன்புக்கரங்கள் திட்டம் துவக்கம் : எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
அன்புக்கரங்கள் திட்டம் துவக்கம் : எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
அன்புக்கரங்கள் திட்டம் துவக்கம் : எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு
ADDED : செப் 16, 2025 07:25 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அன்புக்கரங்கள் திட்டம் துவக்க விழா நடந்தது.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திட்டத்தை துவக்கி வைத்தார். இதையடுத்து, விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக் டர் ஷேக் அப்துல் ரஹ் மான் தலைமை தாங்கினார் .
எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் அன்புக் கரங்கள் திட்டத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கினர்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசுகையில், 'இத்திட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோர் இருவரால் கைவிடப்பட்ட குழந்தைகள், இயலாநிலையில் உள்ள ஒற்றை பெற்றோர், தீராத நோயில் உள்ள ஒற்றை பெற்றோர் போன்ற பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் 9700 வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் இருந்து முதல்கட்டமாக இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களால் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 207 பயனாளிகள் கண்டறியப்பட்டு இத்திட்டத்திற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன், துணைச் சேர்மன் ஷீலா தேவி சேரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட பலர் பங்கேற்றனர்.