/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிகா மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
சிகா மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 26, 2025 12:26 AM

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வுகளில் சாதித்தி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பிளஸ் 2 தேர்வில் மாணவி ஷாகினா பேகம் 600க்கு 595, ஜனனி 593, மோகனபிரியா 592 மதிப்பெண் மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவி ஜிஷ்னுதா 600க்கு 581, மாணவி இனியாஸ்ரீ 580, ேஹமா 579 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் படித்தனர்.
இதேபோன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் ஸ்ரீகாந்த் 500க்கு 495, மாணவி பவ்யா 492, மாணவர் கோபாலகிருஷ்ணன் 489 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
சாதித்த மாணவர்களை, விஷால் ஏஜன்சிஸ் தலைவர் விசாலாட்சி பொன்முடி பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில், சிகா அறக்கட்டளை தலைவர் சாமிநாதன், பள்ளி முதல்வர் கோபால் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.