/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி, விக்கிரவாண்டியில் பா.ஜ.,வினர் தேசிய கொடியுடன் ஊர்வலம்
/
செஞ்சி, விக்கிரவாண்டியில் பா.ஜ.,வினர் தேசிய கொடியுடன் ஊர்வலம்
செஞ்சி, விக்கிரவாண்டியில் பா.ஜ.,வினர் தேசிய கொடியுடன் ஊர்வலம்
செஞ்சி, விக்கிரவாண்டியில் பா.ஜ.,வினர் தேசிய கொடியுடன் ஊர்வலம்
ADDED : மே 19, 2025 06:23 AM

செஞ்சி : செஞ்சியில் பா.ஜ., வினர் தேசிய கொடியேந்தி சிந்துார் ராணுவ தாக்குதல் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.
பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக தீவிரவாதிகள் முகாம் மற்றும் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சிந்துார் ராணுவ தாக்குதல் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், இந்திய படைக்கு நன்றி தெரிவித்து நேற்று செஞ்சியில் பா.ஜ., கட்சியினர் தேசிய கொடியேந்தி ஊர்வலம் நடத்தினர்.
பேரூராட்சி அலுவலகம் அருகே துவங்கிய ஊர்வலத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் தாராசிங் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விநாயகம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாண்டியன், அன்பழகன், மாவட்ட பொருளாளர் பிரேம்குமார், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் எத்திராஜ் முன்னிலை வகித்தனர்.
தரணி தண்டபாணி கல்வி நிறுவனர் தண்டபாணி, முன்னாள் ராணுவ பிரிவு மாநில செயலாளர் வசந்தகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், மாவட்ட செயலாளர்கள் சிவகாமி, முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் சிங்கவரம் சாலை, காந்தி பஜார், விழுப்புரம் சாலை வழியாக, சக்கராபுரம் பூங்காவில் நிறைவு அடைந்தது.
விக்கிரவாண்டி
விழுப்புரம் தெற்கு மாவட்ட விக்கிரவாண்டி தொகுதி பா.ஜ., சார்பில் நடந்த பேரணிக்கு, தெற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் சம்பத், முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை தலைவர் பார்த்தீபன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் ஆனந்த குமார் வரவேற்றார். அங்காளம்மன் கோவில் எதிரில் புறப்பட்ட பேரணி பஸ் நிலையம் அடைந்தது. நிர்வாகிகள் நஅசோக்குமார், வழக்கறிஞர்கள் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.