/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 07, 2025 01:32 AM
விழுப்புரம் : தொழில் போட்டி முன்விரோதம் காரணமாக தாக்கிக்கொண்ட இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சேகர் மனைவி வச்சலாதேவி, 52; இவரும், இந்திரா தெருவை சேர்ந்த விஜய், 29; அவரது மனைவி திலோத்தம்மா, 25; மணிமாறன் மனைவி சாந்தி, 55; ஆனந்தபாபு மனைவி திவ்யாபாரதி, 29; ஆகியோரும் அனிச்சம்பாளையம் மீன் மார்க்கெட் அருகே மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்களுக்குள் தொழில் போட்டியில் முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 4ம் தேதி வச்சலாதேவிக்கு வாகனத்தில் இருந்து மீன் லோடு இறக்கியபோது, விஜய் தரப்பினர் அவரிடம் பிரச்னையில் ஈடுபட்டனர். இதனால், ஏற்பட்ட தகராறில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். விழுப்புரம் டவுன் போலீசார் விஜய், வச்சலாதேவி உட்பட இருதரப்பை சேர்ந்த எட்டு பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.